
posted 2nd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு மருத்துவமனைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
வடக்கு மாகாணத்தின் மருத்துவமனைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (02) செவ்வாய்க்கிழமை 4 மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முல்லைத்தீவு, வவுனியா பொது மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
இதேசமயம், வவுனியா மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)