
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் காலமானார்
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் செல்வி திலகவதி பெரியதம்பி நேற்று (31) ஞாயிறு காலை காலமானார்.
இவர் பருத்தித்துறை ஆத்தியடி விநாயகர் முதலியார் வீதியைச் சேர்ந்த இவர் ஒரு விவசாயப்பட்டதாரி ஆவார். அரசசேவையில் ஆசிரியராக இணைந்துகொண்ட இவர் கோட்டக்கல்விஅதிகாரி வலயக் கல்விப் பணிப்பாளரரக பதவி வகித்து இறுதியில் வடக்குகிழக்கு மாகாணக்கல்விப்பதிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
யுத்தகாலத்தில் போக்குவரத்துவசதிகள் சீராக இல்லாத வேளையில் நெருக்கடியானகட்டத்தில் தமிழ்மாணவராகளின் கல்வி உயர்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார். அக்காலத்தில் கல்வித்திணைக்கள வட்டாரத்தில் இரும்புப்பெண்மணி என இவர் அழைக்கப்பட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)