
posted 10th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
றமழான், சித்திரை பண்டிகைகளை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகள் சுத்திகரிப்பு
புனித றமழான் நோன்பு பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகள் விசேடமாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் பணிப்புரை மற்றும் அறிவுறுத்தல்களின் பிரகாரம் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸ் அவர்களின் மேற்பார்வையில் திண்மக்கழிவகற்றல் மற்றும் வேலைத் தொழிலாளர்கள் இணைந்து இச்சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)