
posted 9th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்
முல்லைத்தீவை சேர்ந்தவரான ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா மேல்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முதல் மேல் நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 8 நீதிபதிகளை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கினார். அவர்களில், இவர் ஒருவரே தமிழராவார்.
முல்லைத்தீவு - செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)