
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் கண்டித்து தமிழ் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகத்திற்கு முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், செ. கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வருகின்றன என்று தெரிவித்து அந்தப் பிரதேச மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
நேற்றுடன் (01) ஏழாவது தினமாக குறித்த மக்கள் போராட்டம் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)