
posted 3rd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனக்கு விருது
ஊடகத் தூது மடல் இரண்டாவது வெளியீட்டு விழாவும். 'ஊடகவியல் கற்போம் - தமிழ் கத்தோலிக்கச் செய்தி லங்கா இணைய யூரியூப் தள திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) யாழ். கொழும்புத்துறை பீச் றோட்டில் அமைந்துள்ள பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரில் ஊடகத்தூது மடலின் பிரதம ஆசிரியர் அருட்கலாநிதி ரூபன் மரியாம் பிள்ளை அடிகள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊடகத் தூது விருது வழங்கலும் இடம்பெற்றது.
இதன் போது ஊடகத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு அதிகமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் தேனாரம் வடமாகாணச் செய்தியாளரும் வடமராட்சி மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதனுக்கு ஊடகத் தூது மடலின் 2024ஆம் ஆண்டுக்கான ஊடகத் தூது விருது வழங்கப்பட்டது. முதல் பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மூத்த ஊடகவியலாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம், மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜ நாயகம், கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார், ஒய்வுநிலை ஆசிரியர் சாள்ஸ் அரியகுமார்,மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)