
posted 29th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முகமாலை மனித எச்சங்கள் இன்று (28) அகழப்படுகின்றன

முகமாலையில் சீருடையுடன் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடம் இன்று திங்கட்கிழமை (29) தோண்டப்படவுள்ளது.
பளை - முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த வியாழக்கிழமை பச்சை நிற சீருடையுடன் மனித எச்சங்களை இனங்கண்டனர்.
இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிபதி அங்கு சென்று ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்த இடத்தை அகழுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)