
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மறைவுக்கு அனுதாபம்
“இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் இலங்கை உலமாக்களில் முதன்மையானவருமான பேராசிரியர் ஏ.எல்.எம். இப்ராஹீம் மௌலவி (கபூரி) அவர்களின் மரணமான செய்தி உள்ளத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மௌலவி கட்சி சார்பில் விடுத்துள்ள அனுதாப அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை உலமாக்களில் பல்கலைக்கழக படிப்பை மேற்கொண்ட முதன்மையானவராக இப்ராஹீம் ஹசரத் பாரிய சேவைகளை இச்சமூகத்துக்கு செய்துள்ளார்.
சவூதி, குவைத் போன்ற நாடுகள் அங்கீகரித்த முதலாவது இலங்கையர் இவரேயாகும்.
தமிழ் மொழியிலும், அரபு மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற அன்னாரது மரணம் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக உள்ளம் இறைஞ்சிப் பிரார்த்திக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)