மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விழா

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விழா

மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விழா

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா(2024) நேற்று சனிக்கிழமை 27.04.2024 கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

பி.ப.2.00 மணியளவில் மருதங்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி பா. திருவருட்செல்வி தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

தொடர்ந்து சிறுவர்கள் பெண்கள், முதியவர்களுக்கான பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு. பிரபாகரமூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வி. ரேவதி, பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பா. நிர்மலன் கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராச் அடிகளார், கெளரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட முள்ளியான் கிராம அலுவலர் கி. சுபகுமார்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச. ஜெகராசா
சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் பி. செளந்தரராசா ஆகியோர் வழங்கிவைத்ததுடன் பிரதம சிறப்பு விருந்தினர்கள் உரைகளையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், மருதங்கேணி சமுர்த்தி வங்கி உத்தியோகஸ்தர்கள், பிரதேச சமுர்த்து பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)