
posted 3rd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு
மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கிளிநொச்சியில் இன்று (03) புதன்கிழமை இடம்பெற்றது.
சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் ரி. கனகராஜ் விழிப்புணர்வு கருத்தரங்கை முன்னெடுத்தார்.
கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுவின் பெண் பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்தனர்.
இதன்போது, மனித உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் பகிரப்பட்டிருந்ததுடன், மனித உரிமைகள் மீறப்படும் போது தொடர்பு கொள்வது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)