
posted 20th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
பேராசிரியராக பதவியுயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (20) சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (20) சனிக்கிழமை பிற்பகல் துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறீ சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த இந்து நாகரிகத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சயனொளிபவன் முகுந்தனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின்படி, இந்து நாகரிகத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சயனொளிபவன் முகுந்தன் இந்து நாகரிகத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
உறவுகளின் துயர் பகிர்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)