பல்வேறுபட்ட சமூகங்களும் ஆட்சி அமைப்பு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பல்வேறுபட்ட சமூகங்களும் ஆட்சி அமைப்பு

‘இந்திய முறைமை’யின் வெற்றி குறித்து அநுரகுமாரவுக்கு தான் சுட்டிக்காட்டினார் என்று சுமந்திரன் எம். பி. தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமாரவை சந்தித்துப் பேசியபோதே இதனைத் தெரிவித்ததாகக் கூறினார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் வியாழன் (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த அநுரகுமார திஸநாயக்கவை சுமந்திரன் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேசப்பட்டவை தொடர்பில் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு,

இந்தியா பல்லின சமூகங்கள் வாழும் நாடாக இருக்கின்றது. அங்கு இன ஒற்றுமை காணப்படுவதோடு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

அப்துல்கலாம் ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கின்றார். உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அவருடைய சுட்டிக்காட்டல்களை அவதானித்திருந்த நான், பின்னர் அவருடனான சந்திப்பின்போது, இந்தியாவில் சிறுபான்மை, மற்றும் நலிவுற்ற சமூகத்தினர் அவ்விதமான பதவிகளுக்கு வருவதற்கும், இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவுவதற்கும் காரணமொன்று உள்ளது எனக் குறிப்பிட்டேன்.

அச்சமயத்தில் அநுர, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்தியாவில் அவ்விதமான நிலைமைகள் நிலவுவதற்கு அங்குள்ள அதிகாரப் பகிர்வு முறை ஒருகாரணமாக இருக்கின்றபோதும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது தான் என்ற விடயத்தினை குறிப்பிட்டேன்.

அத்துடன், அவ்விதமான மொழிவாரியான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால்தான் வடக்கு, கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

இதேநேரம், வடக்கு, கிழக்கில் உள்ள சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதோடு, தொடர்ச்சியாகப் பரஸ்பர கலந்துரையாடல்களை முன்னெடுப்பதென்றும் இணக்கம் காணப்பட்டது என்றார்.

பல்வேறுபட்ட சமூகங்களும் ஆட்சி அமைப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)