
posted 21st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினரால் தொற்ற நோய் விழிப்புணர்வு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையினரால் AIA காப்புறுதி நிறுவன அனுசரணையுடன் அதன் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்று நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வாக துவிச்சக்கர வண்டி பவனியை இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில் ஆரம்பித்துவைத்தனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என். தயாளினி தலைமையில் ஆரம்பமான குறித்த தொற்றா நோய் விழிப்புணர்வு பவனியை மருத்துவர்கள், ஊழியர்கள் மேற்கொண்டனர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமான குறித்த துவிச்சக்கரவண்டி பவனி நெல்லியடி நகரிற்குச் சென்று அங்கிருந்து வதிரிச்சந்தி ஊடாக மாலைசந்தி ஊடாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை சென்று அங்கு நிறைவடைந்தது.
இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி தயாளினி, மகப்பேற்று நிபுணர்,ஜெசிதரா AIA நெல்லியடி கிளை முகாமையாளர் ரகுபரன், நெல்லியடி போலீஸ் நிலைய போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஆகியோர் இதனை ஆரம்பித்து வைப்பதனர்.
இதில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள், உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள், ஏஐஏ காப்புறுதி நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)