
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தமிழ், சிங்கள புது வருட நிகழ்வுகள்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தமிழ் சிங்கள புது வருட நிகழ்வுகள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் தமிழ் மற்றும் சிங்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். திருமதி. எஸ்.ஆர். இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஊழியர்கள் அனைவரின் பங்களிப்புடன் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)