
posted 6th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நித்திரையில் மயக்கமானவர் உயிரிழந்தார்
யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும் தூக்கத்தால் எழும்பாததால், வீட்டார் அவரை தொட்டு எழுப்ப முயன்றபோது அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)