
posted 20th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு காலமானார்

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ப. முத்துக்குமாரசுவாமி குருக்கள் நேற்று (19) வெள்ளிக்கிழமை காலமானார்.
குருக்களின் மறைவையொட்டி தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“வேத வித்தகரான முத்துக் குருக்கள் இந்தியாவில் சிவாகம நெறிகளை நன்கு கற்ற பெருமகன். தனது தந்தை வழியில் பல ஆலயங்களில் கும்பாபிஷேகத்தை நெறிப்படுத்தினார். ஆலயக் கிரியை நெறிகளில் தெளிந்த அறிவுடைய குருவாக விளங்கியதோடு நற் பண்புகள் நிறைந்த மனிதனாக எல்லோராலும் மதிக்கப்பட்டவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் வடக்கில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
உறவுகளின் துயர் பகிர்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)