தேர்தலை புறக்கணிக்க முடியாது சிங்களவர்களை நம்பவும் முடியாது

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

தேர்தலை புறக்கணிக்க முடியாது சிங்களவர்களை நம்பவும் முடியாது

தேர்தலை புறக்கணிக்க முடியாது சிங்களவர்களை நம்பவும் முடியாது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் அரசு கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம். பியான ஞா. சிறீநேசன், தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவும் முடியாது, அதேநேரம் சிங்களவர்களை நம்பவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடம் பலவிதமான கருத்துகள் பரவுகின்றன. அந்தவகையில் ஒரு சாரார் இந்தத் தேர்தலை நிராகரிக்க வேண்டும், வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துகளைத் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்கு தேர்தல் மூலமாக அவர்களின் கருத்துகளை, எண்ணங்களைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. அந்தவகையில் தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்டனர். அந்தவேளையில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. தமிழர்கள் இந்த முறை தமது வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதன் விளைவாக மிக மோசமான அடிப்படைவாத உணர்வுடைய மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதால் தமிழர்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்தார்கள்.

தமிழர்களும், தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு பொதுவான முடிவுக்கு வர வேண்டாம். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும், பிரதானமாகப் பேசப்படும் அநுரகுமார திஸநாயக்க, சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க மூவரும் தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடிய எண்ணம் உடையவர்களாகக் காணப்படவில்லை.

கடந்த 75 ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இன்று நாங்கள் சிங்கள வேட்பாளர்களை நம்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாக சிந்தித்து முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

தேர்தலை புறக்கணிக்க முடியாது சிங்களவர்களை நம்பவும் முடியாது

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)