
posted 14th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம்
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குரார்ப்பணம் புதனன்று (10) இடம்பெற்றது.
காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு. சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து சிறப்பித்தார்.
ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு வாயில் தோரண வாயில் அமைக்கப்பட்டதுடன் ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டியிற்றல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது
இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள்.மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகெண்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)