
posted 29th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழரின் இருப்பை வலுப்படுத்த தமிழ் பொது வேட்பாளர் அவசியம்
தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்துவதற்கு தமிழ் பொது வேட்பாளர் அவசியம் என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவல் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மக்கள் மனு சிவில் சமூக குழுவின் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒற்றுமையோடு ஒரு கோட்பாட்டுக்குள் பயணிப்பதற்கு தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)