
posted 27th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தந்தை செல்வா நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
தந்தை செல்வா என்று அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 47ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று (26) வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிறுவுநர் தலைவரான தந்தை செல்வாவின் சமாதி அமைந்துள்ள யாழ்ப்பாணம் தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் "இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)