
posted 6th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
செவிப்புலன் வலுவற்றோருக்கு உலர் உணவுப் பொருட்கள்
காத்தான்குடி இஸ்லாமிய செவிப்புலன் வலுவற்றோர் ஒன்றியத்தினால் நோன்பு காலத்தில் அதன் உறுப்பினர்களுக்கு சக்காத் உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
ஒன்றியத் தலைவர் எம்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி உதவி சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி எம். நஜ்மியா,காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் ஜே.யூ.எம். முஸம்மில்,காத்தான்குடி அல் அக்ஸா பிரதம பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ.எல். ஆதம்லெவ்வை, காத்தான்குடி அல்- ஹிறா மகாவித்தியாலய ஜமாலி அல்ஹாஜ் மௌலவி ஏ.சி.எச்.எம். பௌசுல் அமீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி இஸ்லாமிய வலுவற்றோர் ஒன்றியத்தின் 55 உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆசிரியரும், இஸ்லாமிய செவிப்புலன் வலுவற்றோர் சங்கச் செயலாளருமான ஏ.எல்.எம். மபாஸ்,பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)