
posted 21st April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்கள்மீது சட்டநடவடிக்கை
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதன்போது, சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம். அஸ்மி தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்மைய பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, பாவனைக்குரியன அல்லாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டதுடன் சுகாதாரத்துக்கு பொருத்தமற்ற முறையில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அஸ்மி தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)