
posted 24th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறைச்சாலையில் இறந்த சந்தேகநபர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தயசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர், கசிப்பு காய்ச்சியமை தொடர்பில் கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கடந்த 20 ஆம் திகதி மாலை யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் (22) திங்கட்கிழமை மதியம் 12:00 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)