
posted 19th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுமி மரணத்துக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம் முற்றுகை
வவுனியாவில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 17ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் உயிரிழந்த நிலையில் 17 வயதான சதுமிதா என்ற சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. இந்த நிலையில், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டுக்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறுமியின் மரணத்துக்கு அவரின் சிறிய தந்தையே காரணம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறுமியின் வீட்டிலிருந்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)