
posted 16th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
சித்திரை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு

புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இன்று (15) திங்கள் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ். செல்வகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார்.
மாலை 3 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வு இரவு நிறைவுபெற்றதுடன், பெருமளவான மக்கள் கலந்து கொண்டாட்டத்திலும், விளையாட்டுக்களிலும் ஈடுபட்டனர்.
நிகழ்வில், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உறவுகளின் துயர் பகிர்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)