
posted 17th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சர்வோதய இயக்க ஸ்தாபகர் மரணம்

இலங்கையின் பழம்பெருமை மிக்கதும் நீண்ட கால சமூக சேவை வரலாற்றைக்கொண்டதுமான சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரெத்தின இன்று (17) கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாசலையொன்றில் காலமானார்.
இலங்கை வாழ் பல்வேறு கிராமப்புற மக்களுக்கும் பரவலான சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதில் முன்னின்று இதுவரை உழைத்துவந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஆரியரெத்தினவின் மறைவு மக்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது பூதவுடல் மெரட்டுரையில் உள்ள சர்வோதய தலைமையகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் சனிக்கிழமை அவரது இறுதிக்கிரியைகள் அரச மரியாதையுடன் கொழும்பில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)