
posted 4th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கலாபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி எஸ்.எல்.எம். றிஸ்வான் (அஹாரி) முப்தி அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம் மாஹீர், முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். நஸீர் , மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எல் ஆதம்பாவ, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபீர், சம்மாந்துறை மஜ்லிஸ் ஹூரா தலைவர் எம்.ஐ.எம். அமீர்(நளிமி), உலமா சபை தலைவர், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)