
posted 18th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
சக்கோட்டை பிரான்சிஸ் ஆலயத்தில் மருத மடு அன்னையின் வழிபாடுகள்

மருத மடு அன்னையின் திருச் சொருபம் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நேற்று (18) வியாழக்கிழமை வைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வருகை தந்தது. பின்னர் அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.
இந்த வழிபாடுகளில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி காலை 8 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்குச் சென்று அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். மருத மடு மாதாவின் வருகையால் நெல்லியடி நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர். நெல்லியடி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)