
posted 14th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
குடுவில் அரபா நகர் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் இணைப்புகள்
இறக்காமம், குடுவில் அரபா நகர் கிராமத்தில் மின்சார வசதி இல்லாமல் மிக நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களுடன் வாழ்ந்து வந்த சுமார் 35 குடும்பங்களுக்கு தனவந்தர்களால் சூரிய சக்தி மின் இணைப்பு வழங்கப்பட்டது.
35 குடும்பங்களுக்கு மின் இணைப்பினை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.எம். சன்சீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீன் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஷ்ஷான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு மின் இணைப்பினை வழங்கினர்.
இதன்போது பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், இறக்காமம் பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ. ஜஃபர், கிராம உத்தியோகத்தர்களான ஏ.சீ.எம். சமீர், எம்.ஜே.எம். அதீக், சமூக சேவையாளர் ஜிப்ரி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
உறவுகளின் துயர் பகிர்வு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)