
posted 14th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
குச்சவெளி பிச்சமல் விகாரைக்கு நிதி ஒதுக்கு
குச்சவெளி பிச்சமல் விகாரைக்கு 50 இலட்சம் ரூபாயை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கியுள்ளார்.
விகாரைக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றார். இதைத் தொடர்ந்து, விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 15 இலட்சம் ரூபாய் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 35 இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணிநேரத்துக்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)