
posted 18th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சியில் பாரிய டெங்கு ஒழிப்புச் சிரமதானம்
கிளிநொச்சி மாவட்டத்தில் வருமுன் காப்போம் எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (18) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார் நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்கள், வர்த்தசங்கம், பொது மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் ஏ 9 வீதியின் இருமருங்கும் உள்ள இடங்களை சிரமதான பணிகள் கரடிப்போக்கு சந்தி முதல் வைத்தியசாலை வரை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)