
posted 29th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்வியங்காடு சந்தையில் மரக்கறி வியாபாரிகள் போராட்டம்
வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள் இன்று திங்கட்கிழமை (29) காலை முதல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மரக்கறி வியாபாரிகளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில்;
எமது சந்தை யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்டு இயங்கி வருகின்றது. நாம் சந்தை குத்தகைப் பணத்தையும் மாநகர சபைக்குச் செலுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து எமது சந்தைக்கு எதிரே உள்ள வீதியோரத்தில் தனியார் ஒருவர் மரக்கறி விற்பனையை நடத்தி வருகின்றார்.
இது குறித்து நாம் யாழ். மாநகர சபைக்கு அறிவித்திருந்தோம். இந்நிலையில் மாநகர சபை குறித்த பகுதி நல்லூர் பிரதேச சபைக்கு உரிய இடம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து நல்லூர் பிரதேச சபைக்கும் முறையிட்டோம். பின்னர் இதற்கு பொலிஸாரிடம் முறையிடுமாறும் கோரப்பட்டது.
பொலிஸாரிடமும் முறையிட்டோம். மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டப் பணம் விதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மேன்முறையீடு செய்து தற்போதும் கடை நடத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில் நாம் வடமாகாண ஆளுநர் உட்பட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவித்தபோதிலும் இதுவரை எதுவும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை-என்றனர்.
இதேவேளை, சந்தையில் விற்கும் விலையை விட தனியாரின் கடையில் மரக்கறிகள் மலிவாக கிடைப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாரிடமும் முறையிட்டோம். மாநகர சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டப் பணம் விதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மேன்முறையீடு செய்து தற்போதும் கடை நடத்தி வருகின்றார்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)