கல்முனை மாநகர சபையின் வருடாந்த கணக்கறிக்கைகளை பொது மக்கள் பார்வைக்கு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை மாநகர சபையின் வருடாந்த கணக்கறிக்கைகளை பொது மக்கள் பார்வைக்கு

கல்முனை மாநகர சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான இறுதி கணக்கறிக்கைகள் (Final Accounts) மாநகர சபையின் புதிய கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ்வினால் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் வருடாந்த இறுதிக் கணக்கறிக்கைகள் தயாரிப்பதில் தொடர்ந்தேச்சியாக நிலவி வந்த குறைபாடுகள் காரணமாக அவை முறையாக நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில் மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்ட வை. ஹபீபுல்லாஹ், கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற கையோடு மாநகர ஆணையாளரின் ஆலோசனையின் பேரில் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் காரணமாக இறுதிக் கணக்குகள் தயாரிப்பதில் நிலவி வந்த குறைபாடுகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் குறுகிய காலத்தினுள் மேற்படி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான இறுதிக் கணக்கறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இறுதிக் கணக்குகள் முறையாக தயாரிக்கப்படாமை காரணமாக ஏற்பட்டிருந்த சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மிகக் குறுகிய காலத்தினுள் நிதிப் பிரிவு அலுவலர்களின் ஒத்துழைப்புடன் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் தெரிவித்தார்.

இவற்றைப் பார்வையிடவும் இவை தொடர்பான விளக்கங்கள் பெறுவதற்கும் கல்முனை மாநகர வாழ் பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை விரைவாக தயாரிப்பதற்கு ஆலோசனைகளை வழங்கிய மாநகர ஆணையாளருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் வருடாந்த கணக்கறிக்கைகளை பொது மக்கள் பார்வைக்கு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)