
posted 30th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை பொது நூலகத்தில் பண்டிகை நிகழ்வு
ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கொண்டாட்ட நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான என். பரமேஸ்வர வர்மன் ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பண்டிகைகளை சிறப்பிக்கும் வகையில் நூலக உத்தியோகத்தர்களினால் தயாரிக்கப்பட்டிருந்த பலகாரங்களைக் கொண்ட விருந்துபசாரமும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)