கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு  முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமல்ல

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமல்ல

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளோ முஸ்லிம் எம்.பி.க்களோ காரணமல்ல என்று கூறியுள்ளார் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் தமிழ் - முஸ்லிம் இனங்கள் அரசியல் தீர்வை - அதிகாரப் பகிர்வை வேண்டி நிற்கின்றனர். இந்த நிலையில், கல்முனை மாநகரத்தில் வெறுமனே ஒரு வட்டாரத்தில் 3,500 தமிழ் மக்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதற்கு தமிழ் தலைமைகள் இடமளிக்காத நிலையில், வடக்கு - கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அதிகாரப் பகிர்வை எவ்வாறு எட்டமுடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கல்முனையில் தமிழ் மக்களுக்கென ஓர் எல்லையுடனான பிரதேச செயலகம் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ்த் தரப்பினர் வேண்டிநிற்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், காணி அதிகாரம் போன்றவற்றை இடைக்காலத் தீர்ப்பில் நிராகரித்துள்ள நிலையிலும் வழக்கு இன்னும் முடியாத நிலையிலும் இந்தப் பிரச்னையில் அரசு எப்படி தலையிட முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், 1989 இல் யுத்த சூழ்நிலை காரணமாக அப்போது கல்முனை பிராந்தியத்தில் இருந்த அன்றைய ஆயுத இயக்கங்களின் உறுப்பினர்கள் பல அச்சுறுத்தல்களை மேற்கொண்டு பலவந்தமான முறையில் இந்த உப பிரதேச செயலக உருவாக்கம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு  முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமல்ல

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)