
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கட்சியின் தலைவராக செயல்பட்ட முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் 2024.1.5ல் நடைபெற்ற உயர்பீட கூட்டத்தின் போது தனது தலைமை பதவியை ராஜினாமா செய்து புதிய தலைவராக கட்சியின் நீண்ட கால உறுப்பினரான நந்தசிவம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கட்சியை இன, மத வேறுபாடுகளுக்கப்பால் கொண்டு சென்று அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்சியின் யாப்புக்கும் தலைவரின் வேண்டுகோளுக்கும் இணங்க இந்த நிர்வாக மாற்றம் நடந்தது.
ஆனாலும் முபாறக் அப்துல் மஜீதின் ராஜினாமாவை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளாமல் அவரை தலைவராக கொண்ட முன்னைய நிர்வாகத்தையே இந்த வருடத்துக்கான நிர்வாகமாக மீண்டும் ஏற்றுக்கொண்டு 27.3.2024 அன்று தமது உத்தியோகபூர்வ வெப்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதன் படி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இந்த வருடத்துக்கான தலைவராக முபாறக் அப்துல் மஜீத் தொடர்ந்தும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)