
posted 23rd April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊர்காவற்றுறை மருத்துவமனை அபிவிருத்திக்காக நடை பவனி

ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனை அபிவிருத்தி பணிக்கு நன்கொடை சேர்க்கும் நோக்கில் நடைபவனி நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையும் யாழ். போதனா மருத்துவமனையும் இணைந்து இந்த நடைபவனியை நடத்தின. வட மாகாண பிராந்திய சுகாதார பணிமனையும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனையும் இதில் பங்கேற்றன.
ஊர்காவற்றுறை மருத்துவமனையில் நோயாளர் விடுதி அமைப்பதற்கு நன்கொடை பெறவும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாகவும் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து காலை 6 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபவனி பண்ணை வீதி வழியாக சென்று, ஊர்காவற்றுறை மருத்துவமனையை அடைந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)