
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியயலாளர் சிவராமுக்கு வவுனியாவில் நினைவேந்தல்

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவுப் பேருரையை ஊடகவியலாளர் நடராசா ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)