
posted 11th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
இராணுவ கட்டுப்பாட்டில்லுள்ள காணிகள் மீட்கும் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் நேற்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில் காணி உரிமையாளர்கள் சிலர் (6 பேர்) கலந்து கொண்டனர்.
உறவுகளின் துயர் பகிர்வு
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றையதினம் இவ்வாறு ஆளுநரைச் சந்தித்தனர். தமது பிரச்சினைகள் குறித்து ஆராய்வதாக ஆளுநர் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)