இந்திய உயர் ஸ்தானிகர்   ஒலுவில் விஜயம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்திய உயர் ஸ்தானிகர் ஒலுவில் விஜயம்

இந்திய உயர் ஸ்தானிகர்   ஒலுவில் விஜயம்

ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தைப் பார்வையிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளை ஏற்று, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்னும் ஒரு வார காலத்தில் அங்கு விஜயம் செய்யவிருக்கிறார் .

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது இது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெளிவுபடுத்தினார்.

அதிகாரிகளும், பிரதேசவாசிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது,

ஒலுவில் துறைமுகம் அதன் செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முடக்கம், அதனோடு சேர்த்து கடலரிப்பு விவகாரம் அதாவது, தொடர்ந்தேர்ச்சியாக துறைமுகத்தின் வடக்கு புறமாக நடந்து வருகின்ற மோசமான கடலரிப்பு என்பதும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளின் பின்னணியில் கடல் கொந்தளிப்பு காலங்களில் இன்னும், இன்னும் ஏதேனும் அனர்த்தம் நடந்து விடுமா என்கின்ற பீதியும் மக்கள் மத்தியில் இருப்பது மட்டுமல்லாது, ஏற்கனவே ஏராளமான ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை இழந்தவர்கள் என்று ஒரு பெரும் தொகுதியினர் இந்தப் பிரதேசங்களில் வாழுகின்றார்கள்.

துறைமுக நிர்மாணத்திற்கென்று ஏராளமான காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அவறிற்கான சுவீகரிப்புப் தொகை கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அதன் நிலுவைத் தொகை சம்பந்தமான சில பிரச்சினைகளை இன்னும் பேசி கொண்டிருக்கின்ற வேறொரு சாராரும் இருக்கின்றார்கள்.

இதற்கிடையில் மீனவர்களுடைய பிரச்சினை என்பதும் படகு உரிமையாளர்கள், மற்றும் ஒவ்வொரு பிரதேச மீனவர் சமூகங்களுக்கிடையிலும் சில முரண்பாடுகள் தோற்றமெடுத்து, அடிக்கடி இது சம்பந்தமான தலையீடுகள் செய்த ஒரு வரலாறும் இருந்து வந்திருக்கிறது.

துறைமுக அதிகார சபைக்கு பொறுப்பான அமைச்சர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களது தலைமையிலும் கூட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். மீன்பிடி அமைச்சர்களையும் அழைத்துப் பேசியிருக்கின்றோம்.

நாங்கள் அமைச்சரவையில் இருந்த போது அமைச்சரவை பத்திரங்களைச் சமர்ப்பித்து பாரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து துறைமுகத்தில் மணல் மேடு குவிவது சம்பந்தமாக அதை அகழ்ந்தெடுத்து மீண்டும் துறைமுகத்துக்குள் படகுகளை உள் நுழைப்பதற்காக அந்த நுழைவாயிலைத் திறந்து விடுகின்ற விவகாரங்களுக்கும் அவ்வப்போது பாரிய நிதி ஒதுக்கீடுகளில் அதற்கென்று விசேட கப்பல்கள் வரவழைக்கப்பட்டு இச் சிரமமான அந்தப் பணிகளைச் செய்துமல்லாமல் இது தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. துறைமுக வடிவமைப்பில் காணப்படும் சில கோளாறுகள் பற்றியும் அவ்வப்போது கதைக்கப்பட்டது.

இதற்கு மத்தியில், புதிதாக நாட்டி ற்கு வந்திருக்கின்ற இந்திய தூதுவர் எங்களை அழைத்துக் கதைத்த போது, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பல விடயங்களில் தங்களது தூதரகத்தில் தலையீடுகள் சம்பந்தமாகவும் வட மாகாணத்தில் செய்து வருகின்ற அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாகவும் எங்களுக்கு மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

உங்களது பிரதேசங்களில் உள்ள தேவைகள் வேறு இருப்பின் சொல்லுங்கள் என்றும் சொன்னார். அப்பொழுது முக்கியமாக எனது நினைவுக்கு வந்தது என்னவென்றால், இந்த ஒலுவில் விடயம்தான். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று இந்தத் துறைமுகத்தை பாவனைக்கு உகந்த ஒரு துறைமுகமாக மீண்டும் மாற்றியமைப்பது, இரண்டாவது, அவற்றில் தொழில் பேட்டை ஒன்றை அமைப்பது.

இவ்வாறான அபிவிருத்திகளைச் செய்வதனால், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியும். இதனால், இப்பிரதேச மக்கள் பயன்பெறலாம்.

இந்தக் கருத்துக்களை இந்திய தூதுவரிடம் முன்மொழிந்த போது அவர் இவற்றைக் கருத்தில் கொள்வதாகவும், எம்முடன் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். அத்துடன், கடந்தவாரம் அவரது அலுவலகத்திலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஒலுவில் துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கு இந்திய தூதுவர் விரும்புகிறார் என்றும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யும்படியாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்காக நான் முதலில் துறைமுக அமைச்சின் செயலாளரை சந்தித்து இத்திட்டங்களை எடுத்துரைத்தேன். அவரும் அதற்கிணைந்து அவ் ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி துறைமுக தொழிநுட்ப விவகாரங்கள் சம்பந்தமாக முகாமைத்துவ பொறியியலாளருக்கும் அறிவுறுத்தினார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் அமைச்சரவை விளம்பரமொன்றைப் பிரசுரித்து முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கான ஒரு கேள்விப் பத்திரம் கோரும் வகையில் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது. ஆனால், இவ்விடயம் தெரியாது. ஆனால், மூன்று முதலீட்டாளர்கள் வந்ததில் இருவருக்கு அம்முதலீட்டில் ஆர்வம் இல்லையென்றும் மாறாக அங்குள்ள இடத்தில் ஒரு தொழில் முயற்சியினை ஆரம்பிக்கும் ஆர்வம் உள்ளதாகச் சொன்றார்கள்.

மீன் பதனிடுவதற்கு ஆர்வம் காட்டி கொரிய நாட்டு கம்பனி ஒன்று முன்வந்திருந்தும் நாம் இது சம்பந்தமாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.
இத் துறைமுகத்தைத் திறந்தால், அது மீனவர் சமூகத்திற்கு பயனளிக்க வேண்டும். அத்துடன் எம் மக்களின் விருப்பமாகவும், மக்களின் வெவ்வேறான பிரச்சினைகளை தீர்க்கக்கூடியவாறும் இருக்க வேண்டுமென்பதுமே எம் நோக்கம் என்றார்.

இந்திய உயர் ஸ்தானிகர்   ஒலுவில் விஜயம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)