
posted 8th April 2024
இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகத்தின் எச்சரிக்கை
இங்கிலாந்திலிருந்து விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்காக ஒரு முக்கிய எச்சரிக்கையினை இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகம் (UK Foreign Office) அறிவித்துள்ளது.
பலவித பிரச்சினைகள் நிலவும் நாடுகளாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 8 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நாடுகள் ‘மிகவும் ஆபத்தான’ நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு ‘பயணிக்க வேண்டாம்’ எனக் கடுமையாக எச்சரித்துள்ளது வெளிநாட்டு அலுவலகம். இந்த நாடுகளாவன, உக்கிறைன் (Ukraine), பெலாறஸ் (Belarus), லெபனான் ( Lebanon), ஈரான்(Iran), சூடான் (Sudan), பலஸ்தீனிய நாடுகள் (Palestinian Territories), றஷ்யா (Russia), இஸ்ராயேல் (Israel) என்பனவாகும்.
மேலே குறிப்பிட்ட இந்த 8 நாடுகளுக்களிலும் யுத்தத்தினால் சுற்றிலாப் பயணிகளுக்கு ஆபத்துகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் சுற்றிலாப் பயணிகளைப் போக வேண்டாம் என இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகம் அறிவித்தலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.