
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அதிகார பயங்கரவாத நடவடிக்கை
"நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான அதிகாரப் பயங்கரவாதம் நடத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும் செயலாகும்" இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்துக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணைபோவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல். அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதற்கான செயல்பாட்டுக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற ஆறாம் நாள் போராட்டத்தில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)