
posted 2nd April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
QR Codeடினால் கதிகலங்கும் உணவகங்கள்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய செயற்றிட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் குணசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனையின் பெயரிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரி, தேநீர்ச்சாலைகள் அனைத்திலும் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக WhatsApp இலக்கம் ஒன்று பரீட்சார்த்தமாக நகர்ப்புற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காணப்படும் 150 இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடைகளின் முன்புறங்களில் இந்த ஸ்டிக்கர் QR code உடன் ஒட்டப்பட்டுள்ளது. உணவின் தரம் , கையாளப்படும் முறை சம்பந்தமான முறைப்பாடுகள் காணப்படுமாயின் வாட்சப் இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தருமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)