
posted 28th April 2024
உறவுகளின் துயர் பகிர்வு
4 கிலோ தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் நேற்று (27) இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் 4 கிலோ தங்க கட்டியை மீட்டுள்ளனர்.
பல கோடி பெறுமதியான குறித்த தங்கத்தை வவுனியா நோக்கி கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்டதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட காரும் அதன் சாரதி மற்றும் இரு பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)