வரலாற்றில் முதல் தடவை

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வரலாற்றில் முதல் தடவை

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வரலாற்றில் முதல் தடவையாக நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு ஒன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.

இனமத பிரதேச வேறுபாடு களைந்து மனித நேயம் மலரட்டும் எனும் தலைப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் குணசிங்கம் அவர்களின் முன்மாதிரி செயற்றிட்டத்தின் கீழ் பணிமனை திறந்தவெளியரங்கில் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நல்லிணக்க இப்தார் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினை சேர்ந்த தமிழ், முஸ்லிம் அதிகாரிகள் உத்தியோத்தர்கள் உட்பட பொது மக்கள் பிரமுகர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

இந்த இப்தார் நிகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் குணசிங்கம் அவர்களுக்கு பெரும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளதுடன் இந்த முன்மாதிரி நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு பிராந்தியத்தில் பல்வேறு சுகாதாரத்துறை தொடர்பான அளப்பரிய சேவைகளை ஆற்றிவரும் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் குனசிங்கம் அவர்கள் இன்னும் சில தினங்களில் வவுனியா பொது அரச வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவியேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் தடவை

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)