
posted 10th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். இந்திய துணைத் தூதரகத்தால் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவி
புனித ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நேற்று (09) செவ்வாய்க்கிழயை உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)