
posted 19th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மருத மடு அன்னை மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில்
மருதமடு அன்னையின் திருச் சொரூபம் பருத்தித்துறை முனை தோமையப்பர் தேவாலயத்திலிருந்து இன்று (19) வெள்ளிக்கிழமைகாலை 7:00 மணியளவில் புறப்பட்டு வடமராட்சி கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்தை காலை 8:20 மணியளவில் வந்தடைந்தது.
பக்தர்களின் மிகப் பிரமாண்ட வரவேற்புடன் மருத மடு அன்னை பருத்தித்துறை முனை தோமையப்பர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கற்கோவளம் வல்லிபுரம் ஊடாக மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்தது. வழி எங்கும் கிறீஸ்தவ மக்கள் மட்டுமின்றி சைவ மக்களும் நிறைகுடம் வைத்து சைவ முறைப்படி வரவேற்றனர்.
வீதி எங்கும் நீலம், வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் வீதிகளுக்கு மேலாக வளைவுகளும் கட்டப்பட்டுள்ளன.
இதேவேளை அன்னையின் திருச்சொருப பவனிக்கு பாதுகாப்பிற்க்காக மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான போலீஸார், சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)