
posted 7th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100ஆவது ஆண்டு யூபிலி விழா
மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு நேற்று (06) சனிக்கிழமை எடுத்து வரப்பட்டது.
யாழ் மரியன்னை தேவாலயத்தில் திருச்சொருபம் வைக்கப்பட்டு யாழ் ஆயர் பேருந்தில் ஞானப்பிரகாசம் அடிகள் தலைமையில் திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100ஆவது ஆண்டு யூபிலி விழாவுக்கு ஆயத்தமாக மருத மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி, யாழ். ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ். மறைமாவட்டத்துக்கு மடு அன்னையின் திருச்சொரூபம் எடுத்து வரப்பட்டது.
யாழ். மறைமாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்ட திருச்சொரூபம் தொடர்ச்சியாக, யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக் கோட்டங்களின் பங்குகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் எடுத்துச்செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)