
posted 20th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
மாகாணத்தில் சுகாதாரத் துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், ஆளுநர் அவர்களுக்கு அவரது செயலகத்தில் நேற்று (19/04/2024) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் கௌரவ ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீகவளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.
தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
உறவுகளின் துயர் பகிர்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)