கடலரிப்பை உடனே தடுங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கடலரிப்பை உடனே தடுங்கள்

ஜனாதிபதிக்கு கை கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது உட்பட அம்பாறை மாவட்ட கடலோர மண்ணரிப்பை தடுக்க நிரந்தரத் திட்டமொன்றை செயற்படுத்துங்கள் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலமாக யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - சாய்ந்தமருது பகுதி கடலரிப்பு உட்பட மாவட்ட கடலரிப்பு தொடர்பில் நான் உட்பட பலரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் எதுவித நிரந்தரத் தீர்வும் இதுவரை எட்டப்படவே இல்லை. தேசிய காங்கிரஸ் தலைவரும் அண்மையில் சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுத்து விட்டது போன்ற வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். ஆனால் அதுவும் தீர்வாக அமையவில்லை. அங்கும் இங்குமாக கல் போடுவது என்பது வெறும் கண்துடைப்பான செயற்பாடாகவே காணப்படுகிறது.

ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் மாவட்ட எம்.பி.க்கள் சாய்ந்தமருது கடலரிப்பை தடுக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏன்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இவ்வாறு கைகொடுக்கும் சந்தர்ப்பத்திலாவது இந்த கடலரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் தெளிவாக பேசியிருக்க முடியும்.

அம்பாறை மாவட்ட எம்பீக்களே, ஜனாதிபதியை இவ்வாறு தனித்தனியாக சந்திப்பதை விடுத்து கட்சி ரீதியாக அல்லது மாவட்ட எம்.பீ.க்கள் அனைவரும் ஒன்றுபட்டு மு.கா. தலைவர் ஹக்கீமுடன் சென்று சந்திக்க முடியுமாக இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும். தனித்தனியாக சென்று சந்திப்பதனால்தான் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடைநடுவில் நிற்கின்றன என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

கடலரிப்பு காரணமாக மீனவ சமுகம் மட்டுமன்றி முழு மக்களுமே மாவட்ட எம்.பி.க்களுடன் கடும் ஆவேஷத்துடன் இருக்கின்றனர். இந்த எம்.பீ.க்களை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. தயவுசெய்து சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பு உட்பட மாவட்ட கரையோர கடலரிப்பைத் தடுக்க நிரந்தர முயற்சி செய்யுங்கள். இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்.

அரசாங்கத்தில் அம்பாறை மாவட்ட எம்.பி.க்களுக்கு இன்று நல்ல செல்வாக்கு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப் பயன்படுத்தியாவது தலைவர் ஹக்கீமின் தலைமையில் ஜனாதிபதியை சந்தித்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள் என்று அந்த அறிக்கையில் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலரிப்பை உடனே தடுங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)